Author: Thana
(அந்துவன்) தேசிய பண்ணை அபிவிருத்தி சபையின் கொட்டகலை ரொசிட்டா பண்ணையில் ஏற்பட்ட தீயின் காரணமாக பல ஏக்கர் புற்தரை தீயால் எரிந்துள்ளது. அட்டன் – நுவரெலியா பிரதான பாதையில் காணப்படும் இந்த புற்தரையில் நேற்று (26) பிற்பகல் ஏற்பட்ட தீயின் காரணமாக இந்த பிரதேசம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதன்போது இந்த பண்ணைக்கு அருகிலுள்ள கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையம் வரை தீ பரவியதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகள் சுமார் ஒரு மணித்தியாலம் நிறுத்தப்பட்டதுடன் இந்நிலையத்தின் ஊழியர்களின் பெரும் முயற்சியின் காரணமாக இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் தீயில் இருந்து காப்பாற்றப்பட்டது. எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் நிலையத்தில் காணப்பட்ட நீரை பயன்படுத்தி எரிபொருள் நிலையம் வரை பரவிய தீயினை பெரும் போராட்டத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததனர். எனினும் இந்த தீ தொடர்ந்து மறுப்புறம் பண்ணையின் புற்தரை வழியாக தொடர்ந்து பரவியது. பின்னர் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகள்…
(அந்துவன்) மின்சாரக் கட்டண அதிகரிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள வரிச் சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் நுவரெலியா – கந்தப்பளை நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. நேற்று (26) காலை முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை கந்தப்பளை பிரதேச பொதுமக்களுடன் இணைந்து, சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள், எதிர்ப்புகளை பதாகைகளை ஏந்தியவாறு வெளிப்படுத்தி, கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்னாப்பிரிக்க அணியை 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலிய அணி வென்றுள்ளது. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதையடுத்து 157 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணியின் வீராங்கனைகள் களத்தில் இறங்கினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 137 ஓட்டங்களை மட்டுமே எடுத்து போட்டியில் தோல்வியடைந்தது. அதனடிப்படையில் மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை 6 முறையாகவும் அவுஸ்திரேலியா அணி தனதாக்கி கொண்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் திணைக்களம்)
(அந்துவன்) சிவனொளிபாதமலையேறுவதற்கு பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் வருகை தந்த 15 இளைஞர்கள் கடந்த இரு நாட்களுக்குள் அட்டன் பொலிஸின் போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். அட்டன் ரயில் நிலைய வளாகத்தில் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே, ரயிலில் வந்த குறித்த இளைஞர்கள், பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர். கொழும்பு, காலி, அநுராதபுரம் மற்றும் குருணாகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின், கஞ்சா, கஞ்சா கலந்த புகையிலை தூள் மற்றும் சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் என்பன கைதானவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. கைதானவர்கள் அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், அவர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளையிட்டு, சரீரப் பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.
வத்தளை நகரம் “மேற்கு பிராந்தியத்தின் பசுமையான வாழ்வாதாரமாக” அபிவிருத்தி செய்யப்படும். இது அடுத்த பத்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில், இது தொடர்பான அபிவிருத்தி திட்ட சட்ட வரைவு தயாரிக்கப்படும். வரைவு செய்யப்பட்ட வத்தளை நகர அபிவிருத்தித் திட்டத்திற்கான மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் கருத்துக்களையும் யோசனைகளையும் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான முக்கிய கல்ந்துரையாடல் வெள்ளிக்கிழமை (24) பத்தரமுல்ல செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இங்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு.நிமேஷ் ஹேரத் வத்தளை – மாபோல மாநகர சபையின் செயலாளர் பீ.ஏ.எஸ்.எஸ். சந்தருவன் மற்றும் வத்தளை பிரதேச செயலாளர் ஆர்.எச்.பி.வசந்தி விக்ரமரத்ன ஆகியோரிடம் வத்தளை நகர அபிவிருத்தி திட்டத்தை முன்வைத்தார். இந்த வரைவு வத்தளை – மாபொல நகரசபை மற்றும் வத்தளை பிரதேச சபை உறுப்பினர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டு…
இலங்கை தமிழ் சினிமாவின் இந்த தலைமுறை இயக்குனர்களில் முக்கியமானவராக அடையாளம் காணப்படுபவர் பவனீதா லோகநாதன். இலங்கையின் மலையக சமுகத்தின் முதல் பெண் இயக்குனராகவும் கருதப்படுமிவர், சினிமா துறையில் பரந்துபட்ட அறிவும் ஆளுமையும் கொண்டவர். இவரைப்பற்றி நாம் ஏற்கனவே malaiyagam.lk இல் நேர்காணல் செய்துள்ளோம். https://youtu.be/TiU0WzGHU8c திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் டப்பிங் கலைஞர் என்ற பன்முக கலைஞராக இயங்கி வரும் இவர், சர்வதேச சினிமாவில் கால்பதிக்க வேண்டும் என்ற இலக்கோடு செயற்பட்டு அதை நிகழ்த்தியும் உள்ளார். ஏற்கனவே இலண்டனிலும் ஜெர்மனியிலும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பவனீதா லோகநாதன், இந்த ஆண்டின் இரண்டே மாதங்களில் நான்கு சர்வதேச அங்கீகாரங்களை பெற்று சாதனை நிகழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்த பவனீதாவுக்கு சிறுவயதிலிருந்தே திரைப்பட இயக்குனராக ஆக வேண்டும் என்ற கனவிருந்தது. அதுவும் உலக சினிமாகளை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். வறுமையான சூழலில் அதுவும் ஒரு …
வடமாகாணம்- வவுனியா மாவட்டம்- இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்மன் திருக்கோயில் காத்து அருளளித்து காவல் செய்யும் தாயே கருமாரி வாழ்நாளில் உடனிருந்து வாழவைக்க வாருமம்மா தேடியுன்னைச் சரணடைந்தோர் நலன்காக்க வேண்டும் இறம்பைக்குளம் கோயில் கொண்ட கருமாரி நாகபூசணி உன்னடியே சரணம் அம்மா வன்னிப் பெருநிலத்தில் வீற்றிருக்கும் தாயே கருமாரி தொல்லையின்றி வாழ்வதற்கு உடனிருந்து உதவுமம்மா நாடியுன்னைச் சரணடைந்தோர் நலன்காக்க வேண்டும் இறம்பைக்குளம் கோயில் கொண்ட கருமாரி நாகபூசணி உன்னடியே சரணம் அம்மா திசையெங்கும் அருள்பரப்பி தீவினைகள் களையும் தாயே கருமாரி திசை காட்டி வழிநடத்த உடனிருக்க வாருமம்மா பாடியுன்னைப் போற்றுமெங்கள் நலன்காக்க வேண்டும் இறம்பைக்குளம் கோயில் கொண்ட கருமாரி நாகபூசணி உன்னடியே சரணம் அம்மா உடல் நலமும், உளநலமும் காத்தருளும் தாயே கருமாரி உடலுறுப்புகள் யாவையுமே சீராக்க அருள்தரவே வாருமம்மா வாழும் மக்கள் மனக்கவலை போக்கி நலன்காக்க வேண்டும் இறம்பைக்குளம் கோயில் கொண்ட கருமாரி நாகபூசணி உன்னடியே சரணம்…
அந்துவன்) அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெரோல் தோட்டத்திலுள்ள தோட்ட குடியிருப்பு ஒன்றின் மலசலகூடத்தில் சிக்கியிருந்த சிறுத்தைக்குட்டியை பிடிக்க நல்லதண்ணி மற்றும் நுவரெலியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் இன்று (26) நடவடிக்கை எடுத்தனர். நான்கு மாதங்களே ஆன குறித்த சிறுத்தை குட்டி மலசலகூடத்தில் சிக்கிய போது தோட்ட தொழிலாளி ஒருவர் சிறுத்தையை பார்த்துவிட்டு மலசலகூடத்தின் கதவை மூடிவிட்டு அட்டன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். சிறுத்தையை அங்கிருந்து மீட்பதற்காக நல்லத்தண்ணி வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். பின்னர், உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த வனஜீவராசி அதிகாரிகள் குறித்த சிறுத்தையை பாதுகாப்பாக மீட்டு, அதன் தாய் வசிக்கும் பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றுள்ளனர். இதேவேளை ஹெரோல் தோட்டத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன் அத்தோட்டத்தில் உள்ள நாய்களும் சிறுத்தைகளால் வேட்டையாடப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
மலையக மக்களால் தனது இன அடையாளங்களை காப்பாற்றும் கூத்து ஆற்றுகை வடிவமாக பல கூத்துக்கள் ,நாடகங்கள் காணப்படுகின்றன. https://youtu.be/vhnqApBn15g அதில் தாய் கூத்தாக காமன் கூத்து அல்லது காமன்டி பண்டிகை காணப்படுகின்றுது . ஓர் இனத்தை அழிக்கவேண்டும் என்றால் முதலில் இனத்தின் அடையாளங்களை கலாச்சாரங்களை பண்பாடுகளை அழிக்க வேண்டும். தமது பண்பாட்டுக்களை அழிக்கப்பெற்றால் இனம் தானாக அழிந்து போகும் .நம் மலையக இனத்திற்க்கு என்று இருநூறு வருடங்கள் வரலாறு உண்டு ,அந்த வரலாற்று இன பாதுகாப்பை செப்பலடன் பூசாரி டிவிஷன் பொகவந்தலாவ பிரதேசத்தை கொண்ட இளைஞர்கள் சாதித்து காட்டியுள்ளனர் . சுமார் 12 வருடங்களிற்க்கு பிறகு 2023.02.25அன்று காமன்கூத்து மீள்ளுயிர் பெற்று விமர்சையாக செய்து முடித்துள்ளார்கள் . தோட்ட இளைஞர்கள் ,பொதுமக்கள் பொருளாதார சிக்கல்கள் மத்தியில் இனபாதுகாப்பிற்க்காக தோட்ட நிர்வாக சபை, இளைஞர்களின் கூட்டுமுயற்சியாலும் பல்லிணமக்கள் பங்குபற்றல் பங்களிப்போடும், சிறப்பாக செய்வதற்க்கு சாத்தியமானது போதைப்பொருள் சீரழிவு மத்தியில் இளைஞர்களின் இவ்முயற்சி…