Author: Thana
மொறட்டுவையில் உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை: பிலியந்தலையில் காரை விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய துப்பாக்கிதாரிகள்!
மொறட்டுவை – சொய்சாபுர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். T-56 ரகத் துப்பாக்கியால் தாக்குதல் நடத்திவிட்டு காரில் தப்பிய துப்பாக்கிதாரிகள், வாகனம் பழுதடைந்ததால் பிலியந்தலையில் மோட்டார் சைக்கிள் ஒன்றை அச்சுறுத்திக் கடத்தித் தப்பிச் சென்றுள்ளனர். அவ்வாறு கடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் சித்தமுல்ல பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கோதுமை மா விநியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஓகஸ்ட் மாத இறுதியிலும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மொரட்டுவை – சொய்சாபுர பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று இரவு 8 மணி 20 நிமிட அளவில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சொய்சாபுர பகுதியில் உள்ள கடையொன்றில் நின்றுகொண்டிருந்த நபரைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் குறித்த கடையின் உரிமையாளர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், உடனடியாகக் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக ரூ. 30,000 வழங்க வேண்டும்!– செந்தில் தொண்டமான் கோரிக்கை
தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக ரூ. 30,000 வழங்க வேண்டும்!– செந்தில் தொண்டமான் கோரிக்கை தீபாவளி தமிழ் மக்கள் அனைவராலும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை. தோட்டத் தொழிலாளர்களுக்கு இவ்வருட தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, முற்பணமாக 30,000 ரூபாவை வழங்க வேண்டும் என இலங்கை முதலாளிமார் சம்மேளனத்திடம் (Employers’ Federation of Ceylon – EFC) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த வருடம் தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 25,000 ரூபா வழங்கப்பட்ட நிலையில், இவ்வருடம் அதிகரித்துள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, முற்பணத் தொகையை 30,000 ரூபாவாக அதிகரித்து வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
புத்தளம், கற்பிட்டி – தேத்தாபொள பகுதியில் ஆடைத் தொழிற்சாலை காணியிலுள்ள நீர் நிறைந்த பள்ளத்தில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேத்தாபொளையைச் சேர்ந்த வடிவேல் செந்தூர் (வயது 45) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொலையாளி தனது மனைவியுடன் முறைகேடான தொடர்பைப் பேணிவந்த ஆத்திரத்தில் இக்கொலையைச் செய்துள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸ் விசாரணைகளில் ஒப்புக்கொண்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மரப்பொல்லுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹரிஸ்பத்துவ – பூஜாப்பிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை காலை முதல் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. நாளை புதன்கிழமை காலை 09.00 மணி முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 03.00 மணி வரை தொடர்ச்சியாக 42 மணி நேரத்திற்கு இந்த நீர் வெட்டு அமலில் இருக்கும் எனத் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. மெதவெல, கலகெதர, மாவத்தகம மற்றும் ரம்புக்கன வீதியைச் சுற்றியுள்ள பல பகுதிகள் இதனால் பாதிக்கப்படவுள்ளதால், பொதுமக்கள் தேவையான நீரை முன்கூட்டியே சேகரித்துச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நாட்டில் பாரம்பரிய தேசிய மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதிப் பத்திரங்களை வழங்கும் வகையில், 1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுர்வேதச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. சுகாதார மற்றும் ஊடக அமைச்சரினால் இதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆயுர்வேதம், சித்த மற்றும் யுனானி மருத்துவ முறைகளை மேலும் அபிவிருத்தி செய்யவும், துறை சார்ந்த ஒழுங்குமுறைகளை பலப்படுத்தவும் இந்தச் சட்டத் திருத்தம் வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அவசர எச்சரிக்கை! – போரளை டீ.எஸ். சந்தி வீதியில் திடீர் போக்குவரத்துத் தடை மற்றும் மாற்றுப் பாதைகள் அறிவிப்பு.
பொரளை – டீ.எஸ். சேனநாயக்க வீதியில் ஏற்பட்டுள்ள நீர் விநியோகக் குழாய் கசிவு காரணமாக, கொழும்புக்குள் நுழையும் வீதியில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவசர திருத்தப் பணிகள் நடைபெறுவதால், மொடல் பார்ம் சந்தியிலிருந்து டீ.எஸ். சந்தி நோக்கி வரும் வாகனங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காகப் பழைய புலர்ஸ் வீதி மற்றும் கோட்டா வீதி ஊடான மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்குப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
நீளமாக முடி வளர்த்தாலோ, பச்சைக்குத்தினாலோ சிறையா? – பரவும் வதந்திகளுக்கு நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் முற்றுப்புள்ளி!
நாட்டில் பாதாள உலகக் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைக் கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டமூலம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், தலைமுடி நீளமாக வளர்ப்பவர்களோ அல்லது உடலில் பச்சைக்குத்தியிருப்பவர்களோ இச்சட்டத்தின் கீழ் உடனடியாகக் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர் எனப் பரவும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என மறுத்துள்ளார். மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்திலோ அல்லது அடிப்படை உரிமைகளிலோ இந்தச் சட்டம் தலையிடாது எனக் குறிப்பிட்ட அமைச்சர், போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குற்றங்களை ஒழிப்பதே இதன் முதன்மை நோக்கம் என்றும் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மீண்டெழும் கட்டுமானம்: புலம்பெயர் முதலீடுகளும் புதிய வாய்ப்புகளும்!
இலங்கையின் பொருளாதார எதிர்காலத்திற்கு கட்டுமானத் துறை ஏன் முக்கியமானது? எழுதியவர்: S. துமிலன் குழுமத் தலைவர் / பிரதம நிறைவேற்று அதிகாரி, Blue Ocean Group of Companies(FCA, FCCA, FCPA (AUS), ACMA (UK), CGMA, FCIM, FMAAT (SL), ACS) இலங்கையின் கட்டுமானம் மற்றும் சொத்து அபிவிருத்தித் துறை, அதன் வரலாற்றிலேயே மிகவும் சவாலான காலகட்டங்களில் ஒன்றைக் கடந்துள்ளது. பொருளாதார ஸ்திரமின்மை, அதிகரித்து வரும் கட்டுமானச் செலவுகள், உயர்ந்த நிதிச் செலவுகள், மாற்று விகித ஏற்ற இறக்கங்கள், வரிவிதிப்பு மாற்றங்கள், திறமையான தொழிலாளர்களின் பற்றாக்குறை மற்றும் கட்டுமானப் பொருட்களின் விநியோகத் தடைகள் போன்ற பல்வேறு சவால்களை அபிவிருத்தியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள், பொறியியலாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. திட்டங்கள் திட்டமிடப்பட்டு, நிதியளிக்கப்பட்டு, நிறைவு செய்யப்படுவதற்கு பல ஆண்டுகள் தேவைப்படும் ஒரு துறைக்கு, இத்தகைய சவால்கள் வெறுமனே தற்காலிகமான இடையூறுகள் அல்ல. முற்றிலும் மாறுபட்ட சந்தைச் சூழ்நிலைகளின் அடிப்படையில்…