Author: Thana
*1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் சொந்த இடத்தில் மீண்டும் அமையும் காங்கேசன்துறை தபால் நிலையம்* யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் அதன் சொந்த இடத்தில் புதிய தபால் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (25) நடைபெற்றது. இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போர் காரணமாக 1990ஆம் ஆண்டு வலிகாமம் வடக்குப் பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்ததையடுத்து, காங்கேசன்துறை தபால் நிலையத்தின் செயற்பாடுகளும் அதன் சொந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன. பின்னர், அப்பகுதியில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டதையடுத்து, தபால் நிலையம் தனியார் கட்டடமொன்றில் தற்காலிகமாக இயங்கி வந்தது. இந்நிலையில், காங்கேசன்துறை உப தபாலகம் அமைந்திருந்த பகுதியில் 32.09 மில்லியன் ரூபாய் செலவில் புதிய தபால் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. இதற்கான கட்டுமானப் பணிகளை எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும்…
பொகவந்தலாவையில் நீண்டகாலமாக சாராயம் விற்றுவரும் கோவில் தர்மகர்த்தா கைது. சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்துவந்த, பொகவந்தலாவை – கெர்கஸ்வோல்ட் மத்திய பிரிவைச் சேர்ந்த அருள்மிகு முத்துமாரியம்மன் கோவிலின் பரிபாலனசபைத் தலைவர் (கோவில் தர்மகர்த்தா) சற்று முன்னர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மதுபான மற்றும் போதைப்பொருள் விற்பனை தொடர்பான தகவல்களைத் தனக்கு வழங்குமாறு, ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சட்டவிரோத மதுபான விற்பனையில் சம்பந்தப்பட்ட இந்த நபர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், பௌர்ணமி போயா தினத்தில் கெர்கஸ்வோல்ட் பகுதியில் அவர் மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக ஹட்டன் பொலிஸாருக்கு இரகசியத் தகவலொன்று கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, சிவில் உடையில் கெர்கஸ்வோல்ட் பகுதிக்குச் சென்ற பொலிஸார், பௌர்ணமி போயா தினத்தில் கள் போத்தல்களுடன் (Toddy Bottles) நடமாடிய நபர்…
ஹட்டனில் ஒரே இரவில் பல கடைகளில் துணிகரக் கொள்ளை: சிசிடிவி கேமராவில் சிக்கிய சந்தேகநபர்; பொதுமக்கள் உதவி நாடும் பொலிஸார்!
ஹட்டன் – சைட் வீதியில் அமைந்துள்ள பல வியாபார நிலையங்களில் ஒரே இரவில் அடுத்தடுத்து இடம்பெற்ற துணிகரக் கொள்ளைச் சம்பவங்கள், அப்பகுதி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. ஹட்டன், சைட் வீதியிலுள்ள பல வியாபார நிலையங்களில் நேற்று (24) சனிக்கிழமை இரவு அடுத்தடுத்து துணிகரக் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பூட்டப்பட்டிருந்த பல கடைகளின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்த நபர்கள், அங்கிருந்த பல்வேறு பெறுமதிமிக்க பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தத் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் தனி நபர் ஒருவர் ஈடுபட்டாரா அல்லது ஏதேனும் ஒரு கும்பல் பின்னணியில் உள்ளதா என்பது குறித்துப் பொலிஸார் பல கோணங்களில் தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். இதனிடையே, கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரின் தெளிவான முகம், அப்பகுதியிலுள்ள வியாபார நிலையமொன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது. பொலிஸாரின் நடவடிக்கை மற்றும் பொதுமக்களின் உதவி…
ஜனநாயக தேசிய கூட்டணியின் பதுளை மாவட்டம், பண்டாரவளை பிரதேச அமைப்பாளராகக் களாதரன் ஆகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது, கட்சியின் தலைவர் பிரபா கணேசன் அவர்களால் இந்த நியமனக் கடிதம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.இந்நிகழ்வில் ஜனநாயக தேசிய கூட்டணியின் தேசிய அமைப்பாளர் நிரூஷ்க குமார மற்றும் பதுளை மாவட்ட அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன் திலீபன் ஆகியோர் உடனிருந்தனர்.
லிந்துலையில் இரு வேறு இடங்களில் குளவிக் கொட்டு: 22 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுக்கலை மற்றும் தியனீலக்கலை தோட்டங்களில் இன்று முற்பகல் இடம்பெற்ற இரு வேறு குளவிக் கொட்டுச் சம்பவங்களில் 22 பேர் பாதிக்கப்பட்டு லிந்துலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று முற்பகல் 11.30 மணியளவில் இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் மட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த 15 பெண்களும் ஒரு ஆணும் அடங்குவதுடன், தியனீலக்கலை தோட்டத்தைச் சேர்ந்த 6 ஆண்களும் அடங்குகின்றனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 9 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஏனையோருக்குத் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
2026 ஒக்டோபர் 24ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு, அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. வடக்கு அந்தமான் தீவுகளுக்கு அருகில் வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளது. இத் தொகுதி பெரும்பாலும் அதே பிரதேசத்தில் நீடித்து, இன்று (24) ஒரு தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப் படுகின்றது. அதன் பின் அது மேற்கு வடமேற்குத் திசையில் நகர்ந்து, ஒக்டோபர் 25ஆம் திகதியளவில் ஒரு ஆழமான தாழமுக்கமாகவும், ஒக்டோபர் 26ஆம் திகதி காலையளவில் மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு புயலாகவும் வலுவடையக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. இக்கட்டமைப்பினால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் எதுவும் இல்லை என்றபோதிலும், அக்கட்டமைப்பை நோக்கி வீசப்படும் காற்று நாடு முழுவதும் வீசுவதால், நாட்டின் தென்மேற்குப் பகுதியில் வரும் சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு அண்மையாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்குத் திசையில்…
ஞானசார தேரருக்கு மன்னிப்புக்கோரி முன்னெடுக்கும் போராட்டத்திற்குத் தடை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றமில்லை!
கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு வழங்குமாறு வலியுறுத்தி, கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் பிக்குகள் குழுவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. பிக்குகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன முன்வைத்த கோரிக்கையை நிராகரித்தே, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதேவேளை, நீதிமன்ற உத்தரவை மீறிச் செயற்பட்டவர்களைக் கைதுசெய்வதற்காகப் பிடியாணை பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையையும் நீதவான் நிராகரித்துள்ளார். பிடியாணை பிறப்பிப்பதற்கான போதிய காரணங்கள் வெளிப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்ட நீதவான், பொலிஸார் தேவைப்படின் குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரலாற்று சாதனை! இங்கிலாந்தை வீழ்த்தி 430 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு திகைப்பூட்டும் வெற்றி பெற்றது இலங்கை!
ராவல்பிண்டி மைதானத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி பேட்டிங்கில் மிரட்டி, 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 429 ஓட்டங்கள் என்ற மலைக்க வைக்கும் இலக்கை நிர்ணயித்தது. இங்கிலாந்து தரப்பில் கேப்டன் ஹாரி ப்ரூக் 202 ஓட்டங்களைக் குவித்து வரலாறு படைத்தார். கடினமான 430 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியினர் சற்றும் தளரவில்லை. பவன் ரத்நாயக்க அபாரமாக ஆடி 130 ஓட்டங்களைக் குவித்து அணியை முன்னின்று நடத்தினார். இவருடன் அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் தசுன் ஷானக்க இருவரும் தலா 97 ஓட்டங்கள் சேர்த்துப் பலமான அடித்தளம் அமைத்தனர். இறுதிக்கட்ட ஓவர்களில் அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி, கடைசி வரை நீடித்த பரப்பரப்புக்குப் பிறகு வெற்றி இலக்கை எட்டி, 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி திகைப்பூட்டியது. ஒருநாள்…
கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் சத்தியாகிரகம்: பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே அமைதியின்மை!
கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகளை அங்கிருந்து அகற்றுமாறு பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை அறிவிக்கச் சென்ற கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. விஹாரமஹாதேவி பூங்காவில் தொடர் சத்தியாகிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதனைத் தடைசெய்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த ஸ்தலத்திற்குச் சென்ற பொலிஸாருடன் ஏற்பட்ட முறுகல் நிலையால் அப்பகுதியில் சற்று பரபரப்பான சூழ்நிலை நிலவியதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் பதிவு செய்வது கட்டாயம்: மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எச்சரிக்கை!
இலங்கையில் பயன்பாட்டிலுள்ள மோட்டார் சைக்கிள்கள் உட்பட அனைத்து வகையான மோட்டார் வாகனங்களையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். நாட்டின் பொது வீதிகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் பதிவு நடைமுறை அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாற்பத்து எட்டு திறன் கொண்ட சிறிய மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்யத் தேவையில்லை என சில விற்பனையாளர்கள் கூறி வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள திணைக்களம், அது முற்றிலும் தவறான கூற்று எனக் குறிப்பிட்டுள்ளது. முறையான பதிவின்றி பொது வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக பொலிஸாரால் அபராதம் விதிக்கப்படும் என்றும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.