Author: Thana
‘அக்போ’ என்ற காட்டு யானையைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இன்று (அக்டோபர் 19) அனுராதபுர மாவட்டத்தில் உள்ள நாச்சியாதீவு உபதேவ வனப்பகுதியில் இலங்கை இராணுவ வீரர்களின் உதவியுடன் அந்த யானை கண்டுபிடிக்கப்பட்டது. சுற்றாடல் அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க, பாதுகாப்புச் செயலாளர், ஓய்வுபெற்ற விமானத் துணைத் தளபதி சம்பத் துயகொந்தவின் அறிவுறுத்தல்களின் பேரில், இத்தேடுதல் நடவடிக்கையில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு உதவுவதற்காக இலங்கை இராணுவம் ஒரு விசேட அணியை அனுப்பியது. தேடுதல் நடவடிக்கையின் ஆரம்ப கட்டத்தில் 30 இராணுவ வீரர்கள் கொண்ட குழு அனுப்பப்பட்டது. தேடுதல் பணியை விரைவுபடுத்துவதற்காக பின்னர் வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. வனவிலங்கு அதிகாரிகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்புடன் பணியாற்றிய இராணுவ வீரர்கள், ‘அக்போ’ என்ற காட்டு யானையைக் கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கைக்கு உதவினர்.
பல மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மின்னல் எச்சரிக்கை – பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவுறுத்தல்!
மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கும், குருநாகல், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் கடுமையான மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று காலை 11:30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, நாளை அதிகாலை 1:00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த மின்னல் தாக்கம் மற்றும் காற்று வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் மரங்களுக்கு அடியில் நிற்பதைத் தவிர்க்குமாறும், திறந்தவெளிகள் மற்றும் மின் சாதனப் பயன்பாடுகளைத் தற்காலிகமாகத் த தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அவசர உதவிகளுக்கு உள்ளூர் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஞானசார தேரர் மீண்டும் சிறைசெல்ல அதிகாரிகளின் நிர்வாகத் தவறே காரணம்: மகா சங்கத்தினரிடம் மைத்திரிபால சிறிசேன நிபந்தனையற்ற மன்னிப்பு!
பூஜ்ய கலகொடஅத்தே ஞானசார தேரருக்குத் தான் வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தமை தொடர்பில், மகா சங்கத்தினரிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், ஞானசார தேரர் மீண்டும் சிறை செல்வதற்குத் தனது முன்னாள் அதிகாரிகளின் நிர்வாகத் தவறே காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஞானசார தேரருக்கு எதிராக நிலுவையில் இருந்த இரு வழக்குகள் தொடர்பில் பொதுமன்னிப்பு வழங்கும் போது, நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் ஒப்புதல் பெறப்பட்டிருக்க வேண்டும். எனினும், தன் கீழ் பணியாற்றிய அதிகாரிகள் அமைச்சின் அனுமதியைப் பெறாமல், நேரடியாகத் தன்னிடம் கையொப்பம் பெற்றுத் தன்னை தவறாக வழிநடத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக மதிப்பதாகத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது அதிகாரிகளால் இடம்பெற்ற இந்தத் தவறுக்காகவே மகா சங்கத்தினரிடம் மன்னிப்புக் கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி – அக்குறணை, குருக்கொட சந்திப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இன்று இப்பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: அக்குறணை, குருக்கொட சந்திப் பகுதியில் சிமென்ட் கலவை ஏற்றிச் சென்ற பாரிய வாகனம் ஒன்று திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த அவ்வாகனம், வீதியில் சென்றுகொண்டிருந்த பல வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது வேகமாக மோதியுள்ளது. இந்த அதிபயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்து அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அக்குறணைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு: தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவிப்பு!
நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை, இன்று மாலை 6:00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், கண்டி, பதுளை, குருநாகல் மற்றும் மேற்கூறப்பட்ட மாவட்டங்களின் ஏனைய பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்கள், நிலச்சரிவுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் கேட்டுக்கொண்டுள்ளது.
வி.தீபன்ராஜ் நானுஓயா கார்லிபேக் சமர்செட் தேநீர் மையம் வெள்ளத்தில் மூழ்கியது தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பல இடங்கள் நீரிழ் மூழ்கியுள்ளன கார்லிபேக் பகுதிகளில் நேற்று பகல் முதல் மழை பெய்துள்ளது. பெய்து வரும் கனமழை காரணமாக, கார்லிபேக் பிரதேசத்துக்கு செல்லும் வீதி மற்றும் சமர்செட் தேநீர் மையம் நீரில் ( Somerset Tea Center ) மூழ்கியுள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 476/ஏ கிரிமிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவில் கார்லிபேக் சமர்செட் தேநீர் மையம் மற்றும் அன்மித்த வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் பிரதேச மக்களும் பாரிய அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர் . இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது இவ் பகுதியில் பெய்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நுவரெலியா – ஹட்டன் பகுறுக்கு வீதியில் போக்குவரத்து…
வி.தீபன்ராஜ் நானுஓயா கார்லிபேக் பாடசாலை செல்லும் மாணவர்கள் – உதவிக்கரம் நீட்டிய லொரி சாரதி நானுஓயா ரதல்ல கார்லிபேக் அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட வெள்ளபெருக்கினால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹட்டன் நுவரெலியா ரதல்ல குறுக்கு வீதியின் இருந்து கார்லிபேக் வெள்ளம் காரணமாக, குறித்த வீதியில் தடைப்பட்டுள்ளது. இன்று (19)ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பாடசாலை செல்லும் மாணவர்கள் பகுதிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வீதியில் மண் நிரம்பியுள்ளது இதன் காரணமாக வீதியை கடக்க முடியாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர் இந்நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிரமத்தை கருத்திற்கொண்டு, பிரதேச வாசிகள் மாணவர்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது இதனால் லொரி மற்றும் முசகரவண்டி வாகனங்களை பயன்படுத்தி அவர்களை பாடசாலைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.(பாடசாலை செல்லும் மாணவர்கள் உதவிக்கரம் நீட்டிய லொரி சாரதி ) இதனிடையே, கார்லிபேக் பகுதியில் கடும் மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடம் வரை…
போக்குவரத்து விதிகளை அடிக்கடி மீறும் சாரதிகளைத் தண்டிப்பதே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சாரதி உரிமப் புள்ளி முறைமையின் முதன்மை நோக்கமாகும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இப்புதிய முறைமையின் கீழ் சாரதிகள் செய்யும் போக்குவரத்து குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப புள்ளிகள் சேர்க்கப்படும். இப்புள்ளிகளின் எண்ணிக்கை 30 ஐ எட்டும்போது சம்பந்தப்பட்டவரின் சாரதி உரிமம் தானாகவே இடைநிறுத்தப்படும். இவ்வாறு உரிமம் ரத்து செய்யப்படும் சாரதிகள் அதனை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். அத்துடன், குற்றம் புரிந்த சாரதிகளுக்குச் சேர்க்கப்படும் புள்ளிகள் குறித்த விவரங்கள் அவர்களின் கைபேசிக்குக் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, அச்சு இயந்திரங்கள் மற்றும் அட்டைகளின் பற்றாக்குறை காரணமாக சுமார் 6 இலட்சத்து 73 ஆயிரம் சாரதி அனுமதி அட்டைகள் அச்சிடப்படாமல் தேங்கிக் கிடப்பதாகவும் இக்கலந்தரையாடலின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
‘காவன்திஸ்ஸ’ என்ற தந்தம் கொண்ட யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். எஹட்டுவேவ பிரதேச செயலகத்தில் திறன் அபிவிருத்தி அதிகாரியாகப் பணிபுரியும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும், வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போதே இவர் சிக்கியுள்ளார். சந்தேக நபரின் வீட்டில் இருந்து 12-போர் ரக துப்பாக்கி, கேப் துப்பாக்கி மற்றும் 24 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர் ஏற்கனவே “டயானா” என அழைக்கப்பட்ட யானை மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல், பொலன்னறுவ, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். அத்துடன் மேல் மாகாணம், காலி மாவட்டம் மற்றும் கடலோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படும் தற்காலிகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான சூழல் நிலவக்கூடும்.