Author: Thana

பிரவீன் கிருஷ்ணராஜா இயக்கத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உருவாகியுள்ள ‘தீயது வெல்லக்கேளீர்’ திரைப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா, வத்தளையில் உள்ள ‘Ram’ திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. ​ராகலையை சேர்ந்த ரொணி கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தின் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கேற்புடன்  படத்தின் பாடல்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன. ​சகிஷ்ணா சேவியரின் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ‘கூத்தாடி’ என்ற பாடலை சாய்சரண் பாடியுள்ளதுடன், சதீஷ்காந்த் தம்பிரத்தினம் வரிகளை எழுதியுள்ளார். ‘நெஞ்சநதி’ பாடலுக்கான வரிகளை இயக்குநர் பிரவீன் கிருஷ்ணராஜாவே எழுதியுள்ளார். ​இத்திரைப்படம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கு மேலதிகமாக, மலையாள மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரத்னவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. ​குழந்தை ஒன்றின் பராமரிப்புச் செலவு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்து கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சன தசநாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார். ​எனினும், சமிக்க கருணாரத்ன தற்போது 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ளார். அவர் தேசியக் கடமை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ள விடயம் நீதிமன்றத்திற்கு முறையாக அறிவிக்கப்படாதமையினாலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. ​தன் மீதான தந்தைத்துவக் குற்றச்சாட்டை சமிக்க கருணாரத்ன முற்றாக மறுத்துள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Read More

சொந்த வீடுகள் அல்லது வணிகக் கட்டிடங்களை வாடகைக்கு விடுவதற்கு முன்னர், வாடகைக்கு வருவோரின் பின்னணி குறித்துச் சரிபார்க்குமாறு பொலிஸார் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். ​கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மேடவத்த இதனைத் தெரிவித்துள்ளார். ​சமீபகாலமாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, போதைப்பொருட்களும் சட்டவிரோத ஆயுதங்களும் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடுகளிலிருந்தே அதிகளவில் கைப்பற்றப்பட்டுள்ளதாகச் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார். ​வாடகைக்கு வருபவர்களைப் பற்றி எந்தவிதத் தகவல்களையும் திரட்டாமல், கட்டட உரிமையாளர்கள் வீடுகளை ஒப்படைப்பதே இதற்கு முக்கியக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். ​வாடகைக்கு விடப்படும் இடங்களில் ஏதேனும் குற்றச் செயல்கள் இடம்பெற்றால், சூழ்நிலைகளுக்கு ஏற்ப வீட்டின் உரிமையாளர்களும் சட்ட ரீதியான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனப் பொலிஸார் எச்சரித்துள்ளனர். ​எனவே, தங்கள் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான நபர்களோ அல்லது புதியவர்களின் நடமாட்டமோ காணப்பட்டால், அதுகுறித்து உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்குமாறு…

Read More

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற புதிய உலக சாதனையை இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் விராட் கோலி படைத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 15,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த உலகின் இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் விராட் கோலி இந்த வரலாற்று மைல்கல்லை எட்டினார். தனது 303-வது இன்னிங்ஸில் இந்த சாதனையை எட்டியுள்ள கோலி, இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது 377-வது இன்னிங்ஸிலேயே 15,000 ஓட்டங்களை எட்டியிருந்த நிலையில், அவரை விட 74 இன்னிங்ஸ்கள் குறைவாக எடுத்துக்கொண்டு கோலி இப் புதிய உலக சாதனையைப் பதிவுசெய்துள்ளார். இப்போட்டிக்கு முன்னர் 14,941 ஓட்டங்களைப் பெற்றிருந்த கோலிக்கு, 15,000 ஓட்டங்கள் என்ற இலக்கை…

Read More

மாதம்பை – குளியாப்பிட்டிய வீதியின் ஹெலபண்டாரகம பகுதியில் இடம்பெற்ற கொடூர மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் தாய் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்சாரத் தூண் ஒன்றுடன் மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரியவருகிறது. இவ்விபத்தில் தும்மலசூரிய – வீரகொடியானை பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 11 வயதுடைய சகோதரர்களே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த அவர்களின் தாய், உடனடியாக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

சுற்றுச்சூழலுக்கும் கலாசாரத்திற்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், உள்ளூர் சமூகங்களை வலுவூட்டும் சூழல்-நட்பு சுற்றுலா அணுகுமுறையை ஊக்குவித்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானம் கிராமிய சிறு தொழில் முயற்சியாளர்கள் வரை நியாயமான முறையில் சென்றடைவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற “நிலையான கலாசாரத்துடன் இணைந்த சுற்றுலாத் துறையில் டிஜிட்டல் புத்தாக்கத்திற்கான தேசிய மாநாடு” நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேல் மாகாண சுற்றுலா சபையும், களனி பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பட்டப்பின்படிப்பு நிறுவனமும் இணைந்து இந்த தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன. “சுற்றுலாத் துறையை மீள்வடிவமைப்பதற்கான டிஜிட்டல் நிகழ்ச்சி நிரலும் செயற்கை நுண்ணறிவும்”என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்பட்ட டிஜிட்டல் போட்டியில் வெற்றி பெற்ற பாடசாலை மற்றும் சுற்றுலாச் சங்க மாணவர்களுக்கான பரிசுகளையும் சான்றிதழ்களையும்…

Read More

2026 செப்டம்பர் 28ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவி, அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Read More

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 15 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ​மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதுடன், 440க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. ​இதனிடையே, நிலச்சரிவு அபாயம் காரணமாக கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடர்கிறது. ​தொடருந்து பாதைகளில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக, ரம்புக்கனையில் இருந்து நானுஓயா வரையிலும், கண்டியில் இருந்து மாத்தளை வரையிலும் தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ​அதேவேளை, நாட்டின் 11 மாவட்டங்களில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக ஒரு லட்சத்து 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குடிநீர் தட்டப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்  மேலும் தெரிவித்துள்ளது.

Read More

8 வயதில் 197 நாடுகளின் அமைவிடங்கள், தேசியக் கொடிகள் மற்றும் தலைநகரங்களை துல்லியமாக அடையாளம் காட்டி சோழன் உலக சாதனை படைத்த தமிழ் மாணவன் இத்தாலி – பலெர்மோ: இத்தாலியில் வசித்து வரும் றொபினற் நேசராஜா மற்றும் கொலஸ்ரிக்கா இணையரின் மகன் 8 வயதான *ரோய்ன்டன் றொபினற்* இவர் 197 நாடுகளின் அமைவிடங்களை உலக வரைபடத்தில் துல்லியமாக அடையாளம் காட்டியதுடன், அந்தந்த நாடுகளின் தேசியக் கொடிகளை வைத்து, குறித்த நாட்டின் பெயர் மற்றும் அதன் தலைநகரத்தையும் சரியாகக் கூறி சாதனை படைத்துள்ளார். இச்சாதனைக்காக இந்தியாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சோழன் உலக சாதனைப் புத்தகத்திலும் (Cholan Book of World Records), லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் தி இன்டர்நேஷனல் அச்சீவ் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸிலும் (The International Achiever Book of World Records) மாணவர் ரோய்ன்டன் ரொபினட் நேசராஜாவின் பெயர் பதிவு செய்யப்பட்டது. …

Read More

கொழும்பு-புறக்கோட்டை செட்டியார் தெருவில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களின் தொடர்ச்சியாக, பொலிஸ் விசாரணைக்காக அழைக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் அனைவரும் எவ்வித தடுத்து வைப்புகளுமின்றி இன்று (செப்டம்பர் 27) விடுவிக்கப்பட்டுள்ளனர். ​பாதிக்கப்பட்ட செட்டியார் தெரு வர்த்தகர்கள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளைப் பாதுகாக்க, ஆரம்பம் முதலே களமிறங்கிய மக்கள் பிரதிநிதிகள், வர்த்தகர்கள் மற்றும் சட்டத்தரணிகளின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. ​கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி நகை திருட்டு விவகாரம் தொடர்பான விசாரணைக்காக வந்த பொலிஸார், இளைஞர் ஒருவர் மீது முறையற்ற விதத்தில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தை நேரடியாகக் கண்ட செட்டியார் தெரு வர்த்தகர்களும் இளைஞர்களும் ஒன்றுகூடி, பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிராகக் கண்டனப் போராட்டத்தை முன்னெடுத்தனர். ​இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் முறையற்ற விசாரணைகளும் தன்னிச்சையான கைதுகளும் இடம்பெற்று வந்ததால் செட்டியார் தெரு இளைஞர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியில் பெரும் அச்சமும் அதிருப்தியும் நிலவி வந்தது. இந்த…

Read More