Author: Thana
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பணச்சலவை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவை ஐந்து இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா முப்பது மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார். அத்துடன், சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்துள்ள நீதிமன்றம், இது தொடர்பில் குடிவரவு குடியகல்வுக்கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழகின் சாட்சிகளுக்கு எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கக் கூடாது என்ற கடுமையான நிபந்தனையையும் நீதவான் விதித்துள்ளார்.
மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார் பிரதி அமைச்சர் பிரதீப்
மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார் பிரதி அமைச்சர் பிரதீப் உண்மையில் மலையக மக்கள் தியாகிகள். பரம்பரை பரம்ரையாக கஸ்டத்தை அனுபவித்து, தோட்டத்தில் பிறந்து, தேயிலைச் செடிகளுக்கு தம்மை உரமாக்கிய அந்த மக்களைப் பார்த்து, இழிவாகப் பேசும் நபர்கள் இனிமேல் சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். உண்மையில் மனசாட்சி, மனிதநேயம் இருந்தால் அவ்வாறு பேசமாட்டீர்கள். என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் தெரிவித்தார். நேற்று (29.09.2026) ஊவாபரணம- அலகொல்ல தோட்டத்தில் 13 வருடங்களாக மண்சரிவு அதி உயர் வலயத்தில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய பிரதி அமைச்சர், இன்று எமது மக்களைப் பார்த்து சிலர் இழிவாகப் பேசுகின்றனர். அவர்களுக்கு நான் ஒன்றைக் கூறுகின்றேன். 203…
2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான இறுதி வருமான வரியைச் செலுத்துவதற்கான கடைசித் திகதி இன்றாகும் (30) என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரிசெலுத்துவோருக்கு நினைவூட்டியுள்ளது. கம்பனிகள், தனிநபர்கள் மற்றும் பங்குடைமைகள் சார்பில் வருமான வரி செலுத்தும் அனைத்து வரிசெலுத்துவோரும், கொடுப்பனவை மேற்கொள்ளும்போது 25260 எனும் கொடுப்பனவுக் காலக் குறியீட்டைப் (Payment Period Code) பயன்படுத்த வேண்டும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. உரிய வரி வகைக் குறியீடுகள் (Tax Type Codes) வருமாறு: கம்பனி வருமான வரி: வரி வகைக் குறியீடு 02 தனிநபர் வருமான வரி: வரி வகைக் குறியீடு 05 பங்குடைமை வருமான வரி: வரி வகைக் குறியீடு 09 வரிசெலுத்துவோர் இணையவழியாகவோ (Online) அல்லது இலங்கை வங்கியின் (Bank of Ceylon) எந்தவொரு கிளையிலும் கொடுப்பனவுகளைச் செலுத்த முடியும். குறிக்கப்பட்ட இறுதித் திகதிக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகளுக்கு வட்டியும் தண்டப்பணமும் அறவிடப்படும் என எச்சரித்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களம், உரிய…
எட்டு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் தொழிலதிபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஓமானில் இருந்து கட்டார் வழியாக கட்டுநாயக்கவை வந்தடைந்த இவரது பயணப் பொதியைச் சோதனையிட்டபோதே இப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பிஸ்கட் மற்றும் சொக்லேட் உறைகளுக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 4 கிலோகிராம் எடையுடைய ‘ஐஸ்’ போதைப்பொருள் இதன்போது மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தேசிய மாணவர் தூதுவர் மாநாடு: நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுச் சாதனை!
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மாணவர் தூதுவர் குழுக்களுக்கான முதலாவது தேசிய மட்ட மாணவர் தூதுவர் மாநாடு, கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவப் பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாட்டின் 25 மாவட்டங்களிலிருந்தும் மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்ற பாடசாலைகளின் மாணவர் தூதுவர் குழுவினர், பொறுப்பாசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கலந்துகொண்டனர். தேசிய ரீதியில் சிறப்பாகச் செயற்பட்ட மாணவர் தூதுவர் குழுக்கள், பொறுப்பாசிரியர்கள் மற்றும் மாவட்டச் செயலக சிறுவர் அபிவிருத்திப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரிகள் ஆகியோருக்கு இதன்போது பதக்கங்களும் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. 2024–2025ஆம் ஆண்டுக்கான மாவட்ட ரீதியிலான போட்டிகளில் நுவரெலியாமாவட்டம் சார்பில் வெற்றிபெற்ற தூதுவர் குழுவினரும் இதன்போது கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் 2024 2025 ஆம் ஆண்டுக்கான மாவட்ட ரீதியில் போட்டியிட்டு நுவரெலியா மாவட்டத்தின் முதலாம் இடத்தை தலவாக்கலை பாரதி மகா வித்யாலயா மாணவர் தூதுவர்…
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. பொலிஸ்மா அதிபர் ஊடாக இந்தப் பிடியாணையை உடனடியாக அமுல்படுத்துமாறு நீதிமன்ற உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைய, பிரதிவாதியான கலகொடஅத்தே ஞானசார தேரரைக் கைது செய்து, எதிர்வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
எயார்பஸ் விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் அக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (29) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ (Krrish) நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காகவும், எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்காகவுமே அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதேவேளை, குறித்த ‘கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரவீன் கிருஷ்ணராஜா இயக்கத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உருவாகியுள்ள ‘தீயது வெல்லக்கேளீர்’ திரைப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா, வத்தளையில் உள்ள ‘Ram’ திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. ராகலையை சேர்ந்த ரொணி கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தின் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கேற்புடன் படத்தின் பாடல்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன. சகிஷ்ணா சேவியரின் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ‘கூத்தாடி’ என்ற பாடலை சாய்சரண் பாடியுள்ளதுடன், சதீஷ்காந்த் தம்பிரத்தினம் வரிகளை எழுதியுள்ளார். ‘நெஞ்சநதி’ பாடலுக்கான வரிகளை இயக்குநர் பிரவீன் கிருஷ்ணராஜாவே எழுதியுள்ளார். இத்திரைப்படம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கு மேலதிகமாக, மலையாள மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரத்னவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. குழந்தை ஒன்றின் பராமரிப்புச் செலவு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்து கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சன தசநாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார். எனினும், சமிக்க கருணாரத்ன தற்போது 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ளார். அவர் தேசியக் கடமை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ள விடயம் நீதிமன்றத்திற்கு முறையாக அறிவிக்கப்படாதமையினாலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. தன் மீதான தந்தைத்துவக் குற்றச்சாட்டை சமிக்க கருணாரத்ன முற்றாக மறுத்துள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சொந்த வீடுகள் அல்லது வணிகக் கட்டிடங்களை வாடகைக்கு விடுவதற்கு முன்னர், வாடகைக்கு வருவோரின் பின்னணி குறித்துச் சரிபார்க்குமாறு பொலிஸார் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மேடவத்த இதனைத் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, போதைப்பொருட்களும் சட்டவிரோத ஆயுதங்களும் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடுகளிலிருந்தே அதிகளவில் கைப்பற்றப்பட்டுள்ளதாகச் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார். வாடகைக்கு வருபவர்களைப் பற்றி எந்தவிதத் தகவல்களையும் திரட்டாமல், கட்டட உரிமையாளர்கள் வீடுகளை ஒப்படைப்பதே இதற்கு முக்கியக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். வாடகைக்கு விடப்படும் இடங்களில் ஏதேனும் குற்றச் செயல்கள் இடம்பெற்றால், சூழ்நிலைகளுக்கு ஏற்ப வீட்டின் உரிமையாளர்களும் சட்ட ரீதியான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனப் பொலிஸார் எச்சரித்துள்ளனர். எனவே, தங்கள் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான நபர்களோ அல்லது புதியவர்களின் நடமாட்டமோ காணப்பட்டால், அதுகுறித்து உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்குமாறு…