Author: Thana

அம்பாறை வைத்தியசாலையின் இயன்முறை வைத்தியர் (Physiotherapist) ஒருவரின் சடலம் தெல்தெனிய பகுதியில் உள்ள கார் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளன. அவரது காதலனே சடலத்தைக் காரில் எடுத்துவந்து தெல்தெனிய பகுதியில் உள்ள ஒரு இடத்தில் கைவிட்டு தப்பிச் சென்றமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தது. இதற்கமைய, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் உள்ள இடமொன்றில் கார் ஒன்றுக்குள் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இருப்பதாக (17) பிற்பகல் 2.00 மணியளவில் தெல்தெனிய பொலிஸாருக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது. பின்னர் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்டபோது, பூட்டப்பட்டிருந்த கார் ஒன்றுக்குள் சடலம் இருப்பதைக் கவனித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, பொலிஸார் அந்த காரின் கதவை உடைத்து அவரது சடலத்தை வெளியே எடுத்து சோதனையிட்டனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த பெண் அம்பாறை வைத்தியசாலையில் இயன்முறை வைத்தியராக பணிபுரிந்த வெலிகம பகுதியைச் சேர்ந்த 33…

Read More

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றைய தினம் (19) இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் ஊவா மாகாணத்திலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Read More

டயகம பாதையில் அரசுப் பேருந்து சேவை தடை – ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி. அட்டன் அரச பேருந்து நிலையத்திலிருந்து போடைஸ் வழியாக டயகம பிரதேசத்திற்குக் காலை 7.00 மணிக்கு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான அரசு பேருந்து நேற்றைய தினம் சேவையில் ஈடுபடாத காரணத்தால், நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். குறிப்பாக டயகம, அக்கரப்பத்தனை, மன்றாசி, ஹோல்புறூக், அல்பியன், டொரிங்டன், பிரஸ்டன், ஆட்லோ, பிரேமோர் உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களும் தங்களது பணியிடங்களுக்குச் செல்ல பல மணி நேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஹட்டன் அரச பேருந்து நிலையத்தால் பேருந்து சேவையில் ஈடுபட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அதற்குப் பதிலாக மாற்றுப் பேருந்தொன்றை உடனடியாக சேவையில் ஈடுபடுத்துவதற்கான…

Read More

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை விடுதி கட்டமைப்பை விரைவாக நவீனமயமாக்கி, மாணவர்களுக்குச் சாதகமான கல்விச் சூழலை உருவாக்குவதற்காக 1,008 மில்லியன் ரூபாய் (1.008 பில்லியன்) விசேட நிதி ஒதுக்கீட்டிற்கு அமைச்சரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் சமர்ப்பிக்கப்பட்ட விசேட திட்ட முன்மொழிவுக்கே இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளது. இலங்கையின் பாடசாலை கட்டமைப்பில் தற்போதுள்ள விடுதிகளில் 126 விடுதிக் கட்டிடங்கள் போதிய பராமரிப்பின்றி, மிகவும் பாழடைந்த நிலையில் காணப்படுவதாக அரசாங்கம் கண்டறிந்துள்ளது. இதனால் அங்கு தங்கியிருந்து கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்திற்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அவலநிலைக்கு விரைவான தீர்வுகளை வழங்கி, விடுதி மாணவர்களுக்குத் தரமான கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்புமிக்க சூழலை உருவாக்குவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இதற்கமைய, அடையாளம் காணப்பட்டுள்ள 126 பாடசாலை விடுதிகளிலும் காணப்படும் பௌதீகக் குறைபாடுகள்…

Read More

தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்து இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று (17) மாலை காரில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த பெண்ணின் காதலன் என நம்பப்படும் நபரே இது குறித்து தெல்தெனிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விசாரணைகளின்படி, உயிரிழந்தவர் வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த ஜூன் 3 ஆம் திகதி முதல் ஜூன் 16 ஆம் திகதி வரை நுவரெலியா பகுதியில் உள்ள விடுதி (Hotel) ஒன்றில் தங்கியிருந்துள்ளார். இதற்கிடையில், இந்த மர்ம மரணத்தின் பின்னணியை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முக்கிய ஆதாரம் ஒன்று பொலிஸாருக்கு கிடைத்துள்ளது. நுவரெலியாவில் அவர்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து, மயங்கிய நிலையில்…

Read More

யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் பயங்கர விபத்து: பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பாடசாலை ஆசிரியை பரிதாபமாக உயிரிழப்பு! மதவாச்சி: யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் பூனாவை, கும்புகொல்லேவ பகுதியில் இன்று (18) காலை இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பூனாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை கண்டியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான பேருந்து ஒன்று, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தக் கோர விபத்தின் போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியை நிலைதடுமாறி பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் பூனாவை, கல்கந்தேகம வித்தியாலயத்தில் (Kalkandegama Vidyalaya) ஆசிரியையாகப் பணியாற்றி வந்த 56 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த ஆசிரியையின் சடலம் தற்போது பிரேத பரிசோதனை நடவடிக்கைகளுக்காக…

Read More

மேற்கு ஆசியப் போரை முடிக்க வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்: டிரம்பும், ஈரானும் அதிகாரப்பூர்வ கையெழுத்து! மேற்கு ஆசியாவில் நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோர் வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளதாக இரு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன. பிரான்சில் நடைபெற்ற ஜி7 (G7) உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, வெர்சாய் அரண்மனையில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் அளித்த இரவு விருந்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பிரான்ஸ் அதிபருடனான இரவு விருந்தின் போது ஜனாதிபதி டிரம்ப் தனிப்பட்ட முறையில் இந்த ஒப்பந்தத்தின் பிரதியில் கையெழுத்திட்டதாக ‘ஆக்சியோஸ்’ (Axios) ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஏ.எஃப்.பி (AFP) செய்தி நிறுவனத்திடம் பேசிய மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர், “டிரம்ப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை எங்களால் உறுதிப்படுத்த முடியும்” என்று தெரிவித்துள்ளார். விருந்தின் போது அமெரிக்க வெளியுறவுத்துறை…

Read More

பூனாகளையில் சோகம்  மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார், தோட்ட உதவி முகாமையாளர் விடுதி / ( பங்களா) மற்றும் விவசாய நில பராமரிப்பாளரான *கலியபெருமாள் கிருஷ்ணமூர்தி*  -தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்குண்டு, *15/06/2026* அன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவர் ஓய்வுபெற்ற தொழிலாளர் என்பதுடன் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இச்சம்பவம் தொடர்பாக லியங்காவெல பொலிசார்* பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்த கலியபெருமாள் கிருஷ்ணமூர்தி அவர்களின் உடல், சட்ட வைத்திய பரிசோதனைக்காக *தியத்தலாவ பொது வைத்தியசாலையில்* இரு தினங்களாக வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளின் பின்னர் நேற்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை இன்று பூனாகலை தோட்ட மயானத்தில்* இடம்பெறும் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். செய்தி நமது செய்தியாளர், (தலவாக்கலை குணா )

Read More

செ.திவாகரன் திருமண மண்டபத்தில் மோதல் – கடமைக்கு சென்ற பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது. கொட்டக்கலை நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் (17) இன்று இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற திம்புள்ள பத்தனை பொலிஸ் அதிகாரிகளை அந்தக் குழுவினர் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். கொட்டக்கலை நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தலவாக்கலை வட்டக்கொட பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் குழு ஒன்று திருமண விழாவில் இன்று மாலை சுமார் 4:00 மணியளவில் திருமண விழாவிற்கு வந்திருந்த மதுபோதையில் இருந்த இரு குழுக்களுக்கு இடையே மோதல் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து மோதலை அமைதிப்படுத்தச் சென்ற பணியில் இருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளை இரு குழுக்களாலும் தாக்கப்பட்டு காயமடைந்தனர். இதனை தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகளை காப்பாற்றுவதற்கு மேலும் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிற பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று அங்கு வந்தபோது,…

Read More

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில்-கேகாலை மாவட்ட பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்களுடன் விசேட கலந்துரையாடல் கேகாலை மாவட்டத்திலுள்ள 67 பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாக அதிபர்களுடனான விசேட கலந்துரையாடல் இன்று (17 ) கேகாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர் நிஷாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர். இம்மாவட்ட பாடசாலைகளின் 3122 மாணவர்கள், 782 ஆசிரியர்கள், மாவட்டத்தின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் முக்கிய அம்சங்களாக பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர் இடைவிலகல் மற்றும் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக அதிபர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர். இதன்போது பெருந்தோட்ட பாடசாலைகளை மாதிரி பாடசாலைகளாக மாற்றுதல், தகவல் தொழில்நுட்ப வசதிகளை விரிவுபடுதல், விளையாட்டு மைதானம் மற்றும் குடிநீர்…

Read More