Author: Thana

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிப்பது தொடர்பில், மகாநாயக்க தேரர்கள் இதுவரை அரசாங்கத்திடம் எவ்விதக் கோரிக்கையும் விடுக்கவில்லை என அமைச்சரவைப்பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். ​ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்பட்டாலும், அரசாங்கம் எப்போதும் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டே செயற்படும் எனவும், சட்டத்திற்கு அப்பாற்பட்டு எவ்வித மாற்றங்களையும் செய்யப் போவதில்லை எனவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார். ​எனினும், முப்பீட மகாநாயக்க தேரர்களால் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு அமையவும், மகாநாயக்க தேரர்களின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட விசேட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலும் சிறைச்சாலை நிலையியல் கட்டளைகள் திருத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ​இந்தத் திருத்தப்பட்ட கட்டளைகளுக்கு அமையவே எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும், நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்டு மாற்றியமைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும்…

Read More

லாகூரில் நடைபெற்ற மும்முனை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5ஆவது போட்டியில், பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ​ போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் பந்துவீசிய இலங்கை அணி, பாகிஸ்தானை 25 தசம் 3 ஓவர்களில் 110 ஓட்டங்களுக்குள் சுருட்டியது. ​இலங்கை அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய தில்ஷான் மதுஷங்க 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் வீழ்த்தி அசத்தினார். ​தொடர்ந்து 111 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி, 18 தசம் ஒரு ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை அடைந்தது. ​துடுப்பாட்டத்தில் கலக்கிய கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். ​191 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலங்கை அணி இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ள போதிலும், பாகிஸ்தான் அணி ஏற்கனவே தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மேல் கொத்மலை நீரேந்து பகுதிகளில் நேற்று (26) பெய்த பலத்த மழை காரணமாக, குறித்த நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் நேற்று பிற்பகல் முதல் திறக்கப்பட்டுள்ளன. நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் இதனை தெரிவித்தனர். குறித்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மேலும் மழை பெய்யுமாயின், நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகளும் தானாகவே திறக்கப்படும் என்பதால், நீர்த்தேக்க அணைக்கட்டுக்குக் கீழ் பகுதியில் கொத்மலை ஓயாவின் இரு மருங்கிலும் வசிப்போர் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Read More

மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவுறுத்தல் ​வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் இலங்கையைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளுக்குப் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பான ‘சிவப்பு எச்சரிக்கை’ அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. ​இன்று (27) முற்பகல் 8:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அவசர எச்சரிக்கை அறிவிப்பானது, அடுத்த 12 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ​புயலின் நகர்வு மற்றும் தற்போதைய நிலை: மேற்கு – மத்திய வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலவிய ‘அர்னாப்’ தீவிரப் புயலானது மேலும் வலுவடைந்து ‘மிகத் தீவிரப் புயலாக’ மாற்றமடைந்துள்ளது. இது இன்று (27) அதிகாலை 02:30 மணியளவில் வட அகலாங்கு 15.9 மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.4 – அதாவது காங்கேசன்துறையில் இருந்து சுமார் 890 கிலோமீற்றர் வடகிழக்கு திசையில் மையம் கொண்டிருந்தது. ​இப்புயல் இன்று மாலை 05:30 மணி வரை மேற்கு – வடமேற்கு…

Read More

ஹட்டன் – டிக்கோயா மணிக்கவத்த தோட்டத்தில் உள்ள தொடர் குடியிருப்பில் இன்று (26) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்தனர். ​12 வீடுகளைக் கொண்ட குறித்த தொடர் குடியிருப்பின் ஒரு பகுதியில் திடீரெனத் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனைக் கண்ட தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள், ஹட்டன் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து உடனடியாகச் தொழிற்பட்டுத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் ஏனைய 9 வீடுகளுக்கும் தீ பரவுவது தடுக்கப்பட்டது. ​இத்தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயங்களோ அல்லது உயிராபத்தோ ஏற்படவில்லை. இருப்பினும், பாதிக்கப்பட்ட வீடுகளில் இருந்த வீட்டு உபகரணங்கள், சான்றிதழ்கள் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட அனைத்துத் தனிப்பட்ட உடமைகளும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன. ​சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹட்டன் காவல்துறையினர், மின் கசிவு காரணமாகவே இத்தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர்.

Read More

நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, நாளை செவ்வாய்க்கிழமை நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ​மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ​இருப்பினும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள், முன்னர் திட்டமிட்டபடி தடையின்றி நடைபெறும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Read More

நாட்டில் தற்போது நிலவிவரும் மழை உடனான சீரற்ற வானிலை காரணமாக பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை எடுக்கும் முழு அதிகாரமும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ​இது தொடர்பில் பின்பற்ற வேண்டிய அவசியமான வழிகாட்டுதல்களையும் அறிவுறுத்தல்களையும் கல்வி அமைச்சு, மாகாண அதிகாரிகளுக்கு ஏற்கனவே வழங்கியுள்ளது. ​இதனிடையே, நிலவும் சீரற்ற வானிலையை கருத்திற்கொண்டு மத்திய மாகாணத்தின் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 26 பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Read More

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லங்கா ஐ.ஓ.சி (Lanka IOC) நிறுவனம் 95 ஒக்டேன் ரக பெற்றொல் லீட்டர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் அதிகரித்துள்ளது. ​இதற்கமைய, இதுவரை 475 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 95 ஒக்டேன் ரக பெற்றொல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 495 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. ​அதேவேளை, ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது

Read More

லங்கா ஐஓசி நிறுவனத்தைத் தொடர்ந்து சினோபெக் நிறுவனமும் ஒக்டேன் 95 ரக பெற்றொல் லீட்டர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ​ சினோபெக் (Sinopec) எரிபொருள் நிறுவனம், ஒக்டேன் 95 ரக பெற்றொல் லீட்டர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் உயர்த்தியுள்ளது. ​இதற்கமைய, சினோபெக் எரிபொருள் நிலையங்களில் 475 ரூபாவாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றொல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 495 ரூபாவாக அதிகரித்துள்ளது. ​முன்னதாக, லங்கா ஐஓசி (Lanka IOC) நிறுவனம் நேற்றிரவு (25) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒக்டேன் 95 ரக பெற்றொலின் விலையை 20 ரூபாவினால் உயர்த்தியிருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து சினோபெக் நிறுவனமும் இந்த விலைத் திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.

Read More

மானிப்பாய் பண்டத்தரிப்பில் 36.09 மில்லியன் ரூபாய் செலவில் புதிய தபால் நிலையம்* யாழ்ப்பாணம், மானிப்பாய் பிரதேசத்தின் பண்டத்தரிப்புப் பகுதியில் 36.09 மில்லியன் ரூபாய் செலவில் புதிய தபால் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ச. பவானந்தராஜா, மாவட்ட மற்றும் பிரதேச மட்ட அரச அதிகாரிகள், அலுவலகங்களின் இணைப்பாளர்கள், பிரதேச சபைத் தவிசாளர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். க. கிஷாந்தன் ஊடகச் செயலாளர் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு

Read More